அஜித் குமார்துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் கடந்த 28-ந் தேதி வெளியானது. டீசரில் எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு…. என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது இப்படத்திற்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்றும் வரும் நிலையில், நடிகர் அஜித்குமார் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு வருகிற 13ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு பாடல், சில காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகதகவல் வெளியாகி உள்ளது.