விடாமுயற்சி வெளியீட்டால் தள்ளிப் போகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

தனுஷ், ராஜ் கிரண், ரேவதி, நடித்த ‘பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த ‘ராயன்’ படம் கடந்த வருடம்வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் 2025 பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியாகி வைரலானது.

‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி திரைக்கு வருவதாலும் விடாமுயற்சி படத்தையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதாலும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெளியாகும் புதியதேதியை

படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகிறது.