விடுதலை விமர்சனம் அர்ச்சுன் சம்பத்துக்கு பி.சி.ஸ்ரீராம் அறிவுரை

இந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் வணிக ரீதியாகவும், அரசியல் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்ட படம் விடுதலை. இடதுசாரி அரசியல் பேசும் இந்தப் படம்  அந்தப்படத்திற்கு பட்ஜெட்டுக்குரிய வசூல் திரையரங்குகள் மூலம் கிடைத்து வருகிறது.
சினிமாவை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும்
வழக்கம் தமிழ்நாட்டில்இருந்து வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் – 2, விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான்
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா ஆகிய படங்கள் அரசியல் ரீதியாக, விமர்சன அடிப்படையில் சமூக வலைத்தலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அதனால் மூன்று படங்களுமே
வசூல் அடிப்படையில் இழப்பை எதிர்கொண்டது. ஆனால் விடுதலை அந்த மாதிரியான விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ச்சுன் சம்பத் விடுதலை படத்தை விமர்சித்து தனது X தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளதற்கு உடனடியாக இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பி.சி.ஸ்ரீராம் உடனடியாக பதனது X தளம் மூலமாக பதில் அளித்துள்ளார்.
அர்ச்சுன் சம்பத் தனது X தளத்தில்
“நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது “உபா” பாய வேண்டும்முக்கியமாக அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயண்ட் மூவீஸ் மீது

ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இத்திரைப்படத்தின் மீதுகவனம் செலுத்த வேண்டும்

காவல்துறையின் விசாரணை

காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கௌரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குனர்

திரையரங்கை பிரச்சார மேடையாக மாற்றி… தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார்

பெருமாளின் பயங்கரவாதத்தினால் அம்மாவட்டங்கள் அடைந்த பின்னடைவு ஏராளம்

பாரதத்தின் அடுத்த ரெட் காரிடாராக தமிழகத்தை மாற்ற துடிக்கும் சக்திகளை… திமுக ஊக்குவிப்பது அம்பலமாகிறது

நக்சல்வாதத்தின் கொடுமைகளை கிழக்கு மாநிலங்களின் அவல நிலையை கண்டு தமிழகம் பாடம் கற்கட்டும்

சாலைகள் போடுவதை எதிர்த்து போராடும் அனைவரும் அயோக்கியர்களே…

திரையரங்கில் கைதட்டி விசிலடித்து இத்திரைப்படத்தை கொண்டாடும் அனைத்து இளைஞர்களும்

நக்சல் வாதத்தினால் பின்னடைவை சந்தித்த மாநிலங்களை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும்

இன்று தமிழகத்தில் தினக்கூலிகளாக பணியாற்ற இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நக்சல்வாதத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களை சார்ந்தவர்கள் தான்

அவர்களிடம் நீங்கள் பேசும் புரட்சியை கூறி பாருங்கள்… வாயில் மட்டுமல்ல எல்லாவற்றின் மூலமாகவும் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள்

எனக் குறிப்பிட்டுள்ளார்”

அர்ஜுன் சம்பத்தின் அந்தப் பதிவை பகிர்ந்து கருத்துப் பதிவிட்டுள்ள இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பி.சி.ஶ்ரீராம்,
 “நம்முடைய கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால நிதர்சன நிலையையும் எடுத்துச் சொல்லும் கிளாஸிக் திரைப்படம்தான் ‘விடுதலை பாகம் 2’. தயவுசெய்து வளருங்கள்ஒரு படத்தை கலை வடிவமாகப் பாருங்கள்”
என்று பதில் தந்துள்ளார்.