நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது.
அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன. இவற்றோடு இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும்’கருடன்’திரை
இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கிறார் என்பது தனிச்சிறப்பு.
ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்புப் பணிகளைக் கையாள, ஜி.துரைராஜ் கலை இயக்கப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் முதல்பார்வை மற்றும் கிளிம்ப்ஸ் எனப்படும் சில காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டது.
அக்காட்சிகளில், சூரி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றமும்,அவருடைய அதிரடியான அறிமுகமும் அதில் இடம்பெற்றுள்ள வசனங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
வெற்றிமாறன் கதை என்பதோடு அவருடைய தயாரிப்பு நிறுவனமும் இப்பட வெளியீட்டில் இணைந்திருப்பது மற்றும் சசிகுமார், உன்னிமுகுந்தன் ஆகியோர் இருப்பது ஆகியனவற்றால் இப்படத்துக்கு இரசிகர்கள் மத்தியிலும் வியாபார வட்டங்களிலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
அதோடு இப்படத்தின் பாடல்கள் உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றிருக்கிறது. அதற்காக அந்நிறுவனம் சுமார் இரண்டு கோடி கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல்பார்வை வெளியான நேரத்திலேயே இந்த வியாபாரம் நடந்திருப்பது சூரிக்கான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.இந்த வியாபாரம் படக்குழுவினரை உற்சாகப் படுத்தியிருக்கிறது.
அதோடு மற்ற வியாபாரங்களுக்காகப் பலர் தொடர்புகொண்டுவருகிறார்கள் என்பதால் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
Next Post