விஸ்வரூபமெடுக்கும் விஜய் சேதுபதி சம்பளம்

திரைப்படங்களின் வெற்றிதோல்வியை முன்னிறுத்தி அதில் நடித்துள்ள கதாநாயகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது தனியார் தொலைக்காட்சி வருகைக்கு பின் திரைப்படங்களை அதில் ஒளிபரப்பபடத்தின் உரிமைகள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டன தமிழகத்தில் சன், விஜய், ராஜ், பின்னர் ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகளிடையே புதிய படங்களை வாங்குவதற்கு கடுமையான போட்டி ஏற்பட்டது அப்போதைய ஆளுங்கட்சியின் சேனல் வேண்டாம் என்கிற படங்களின் தொலைக்காட்சி உரிமையை மட்டுமே பிற தொலைக்காட்சிகள் வாங்க முடியும் என்கிற சூழல் ஏற்பட்டபோது சன் தொலைக்காட்சி நேரடியாக படங்களை தயாரிக்கவும், முதல் பிரதி அடிப்படையில் வாங்கவும் செய்தனர் தமிழ் சினிமாவின் முன்ணணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் தொலைக்காட்சி உரிமை தங்களிடம் இருக்க வேண்டும் என்பதால். இதனால்

தமிழ்நாடு திரையரங்குகளின் வசூல் கணக்கு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட நடிகர்கள் சம்பளம் தொலைக்காட்சி உரிமை விலையை அடிப்படையாக கொண்டு நடிகர்கள் வாங்க தொடங்கினார்கள் இதனால் திரைப்படங்களின் வணிக எல்லை விரிவடைந்து வருவாய் அதிகரிக்க தொடங்கியதால் அதன் பெரும் பகுதி நடிகர்கள் சம்பளமாகவே போய் விடுகிறது இந்த நிலை முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டுமல்ல இரண்டாம்நிலை மூன்றாம்நிலையில் இருக்கும் நடிகர்களும் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி கேட்க தொடங்கியுள்ளனர் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்கிற மனநிலையில் தயாரிப்பு நிறுவனங்களும் வருகின்றவருமானத்தில் பெரும் பகுதியை கொடுத்துவருகின்றனர் அதனால்தான் கடந்த பல வருடங்களாக குறிப்பிடத்தக்க வெற்றியை தனித்து கொடுக்க முடியாத விஜய்சேதுபதிக்கு 25 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க முன் வந்திருக்கிறது லைகா நிறுவனம்சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி ஆர்யா உட்பட பலர் நடிப்பில் சங்கமித்ரா என்கிற படம் தயாரிக்க போவதாகதேனாண்டாள் நிறுவனம் அறிவித்திருந்தது ஆனால் கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையை எதிர்கொண்ட அந்த நிறுவனம் தயாரிப்பை தொடர முடியவில்லை

இப்போது அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அதேசமயம், ஜெயம்ரவி உள்ளிட்டோர் தேதிகள் உடனடி படப்பிடிப்பிற்கு ஒத்துவராததால் சங்கமித்ரா படத்துக்கு முன்பாக இன்னொரு படத்தை சுந்தர்.சி இயக்குவதெனவும் அந்தப்படத்தையும் லைகா நிறுவனமே தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

அதனால் அரண்மனை வரிசைப் படங்களில் அடுத்ததாக அரண்மனை 4 படம் எடுக்கலாம் என சுந்தர் சி கூறிய ஆலோசனையை லைகா ஏற்றுக்கொண்டிருக்கிறது

அந்தப்படத்தில் விஜய்சேதுபதி சந்தானம் ஆகியோர் நாயகர்களாக நடிக்கவிருக்கிறார்கள்.

உடனடியாக இந்தப்படத்துக்குத் தேதிகள் கொடுத்துவிட்டாராம் விஜய்சேதுபதி. அதற்குக் காரணம் அவருக்குப் பேசப்பட்ட சம்பளம்.ஆம், இந்தப்படத்தில் நடிக்க அவருக்கு இருபத்தைந்து கோடி சம்பளமாம்.இவ்வளவு சம்பளம் என்பதால் முன்பு ஒப்புக்கொண்ட படங்களைத் தள்ளி வைத்துவிட்டு இந்தப்படத்தில் முதலில் நடிக்கவிருக்கிறார் விஜய்சேதுபதி இதற்கான பேச்சுவார்த்தைகளை
ரெட்ஜெயண்ட் நிறுவனம் நடத்தி முடித்ததால் படத்தையும் அந்நிறுவனமே வெளியிட உள்ளது விஜய்சேதுபதி

 ஏற்கனவே ஒப்புக் கொண்டு கால்ஷீட் கொடுக்கப்பட்ட படங்களின் தயாரிப்புகள் திட்டமிட்ட அடிப்படையில் நடக்காது இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வரக்கூடிய புகார்கள், பஞ்சாயத்துக்களை சமாளிக்கும் பொறுப்பை ரெட் ஜெயண்ட் ஏற்றுக்கொண்டுள்ளதாம்

– அம்பலவாணன்