வெற்றிமாறனை சாடினாரா இயக்குநர் ராஜீவ் மேனன்

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் அதிக நாள்கள் படப்பிடிப்பு செய்யும் இயக்குநர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய சினிமாவில் பிரபலமானமுன்னணி ஒளிப்பதிவாளரான  ராஜீவ் மேனன். ’மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’, ‘சர்வம் தாளமயம்’ உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.

இவர் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அரசு எந்திரம், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை தோலுரித்துக் காட்டியகதாபாத்திரம்.திரைக்கதையில் விஜய் சேதுபதிக்கு இணையான கதாபாத்திரமாக ராஜீவ் மேனன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.

 வலைத்தளநேர்காணல் ஒன்றில்பங்கேற்ற ராஜீவ் மேனன்,
 சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்த பின்பு பல இயக்குநர்கள் இஷ்டத்துக்குப் படப்பிடிப்பு நடத்துகின்றனர்.
மணிரத்னம் இயக்கிய குரு படத்தின் படப்பிடிப்பு 90 நாட்களில்முடிந்தது. கடல் கொஞ்சம் அதிகம். மணிரத்னம் படத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், இப்போது பல இயக்குநர்கள் காட்சிகளை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதற்குள் சிக்கினால் அவ்வளவுதான்.

’என்னுடன் பயணியுங்கள்’ என இயக்குநர்கள் சொல்கின்றனர். இது அடிமைத்தனம் மாதிரி இருக்கிறது. தனக்குத் தோன்றும்போது, சிந்தனை வரும்போது என இயக்குநர்கள் நீண்டகாலம் படப்பிடிப்பில் இருக்கின்றனர். ஜூராசிக் பார்க் திரைப்படத்தை 72 நாள்களில் எடுத்து முடிக்கின்றனர்.

ஆனால், நமது இயக்குநர்களால்

சரியாகத் திட்டமிட முடியவில்லை. ஒரு திரைப்படத்திற்குப் பின் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களின் நேரத்தையும் இது பாதிக்கிறது. உண்மையில், திட்டமில்லாமல் படப்பிடிப்பை நடத்தினால் பெரிதாக பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான்.

இப்போது, பிரம்மாண்டம் வேண்டும் என்பதற்காக பல காட்சிகளிலும் 100 ஜூனியர் நடிகர்களை நிறுத்துவது, 4 கிரேன்களைக் கொண்டுவருவது என அவர்களுக்கான ஆடை, உதவி இயக்குநர்கள் என எவ்வளவு செலவு? இது சினிமாவிற்கு ஆரோக்கியமான சூழலில்லை.

96, லப்பர் பந்து போன்றவை சிறிய படங்களாக இருந்தாலும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. சமீபத்தில், என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம் மஞ்ஞுமல் பாய்ஸ். ஒரு படத்திற்கு நாயகன் முக்கியமில்லை என்கிற விஷயத்தை இப்படத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு காட்சியும் வீணடிக்கப்படவில்லை பேசியுள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன் விடுதலை – 1 மற்றும் விடுதலை – 2 படங்களின் படப்பிடிப்பை 270 நாள்கள் வரை நடத்தியது குறிப்பிடத்தக்கது.