மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
ஜனவரி 14 அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம்
பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக் என்பதால் அது சம்பந்தமான காப்புரிமை தொடர்பாக ஹாலிவுட் நிறுவனத்துடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், நிலையில், தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக 2024 டிசம்பர் 31 ஆம் தேதி லைகா நிறுவனம் அறிவித்தது.
தற்போது பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால் படத்தின் டிரைலரை நேற்றுமாலை 6:40(16.01.2024) மணியளவில் வெளியிட்டனர். 2:21 நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலர் முழுக்க முழுக்க ஹாலிவுட் படங்களின்சாயலில் ஸ்டைலிஷ் ஆன மேக்கிங் உடன் படம் உருவாகியுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.
ஒரு பயணத்தில் தொலைந்து போன தனது மனைவி திரிஷாவை தேடும் அஜித் குமார் அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், என்பதை கண்டறியும் முயற்சியில்அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பதை டிரைலரை பார்க்கையில் எளிதாகயூகிக்க முடிகிறது.
டிரைலர் தொடக்கம் முதல் இறுதிவரை பக்கா ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகம் உள்ளது. அஜித்குமார்ஒரு பக்கம், அர்ஜூன் ஒரு பக்கம் என ஆக்ஷனில் அசத்துகின்றனர்.
அனிருத்தின் பின்னணி இசையும் அதற்கு பக்காவாக பொருந்தி உள்ளது.டிரைலர்வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே ‘விடாமுயற்சி’ தொடர்பான பதிவுகள் எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமெடுத்தன. இந்த சூழலில் தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்ந்து வெளியான 4 மணி நேரங்களிலேயே 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர். எதிர்வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.