ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சுவாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், டாணா ரகுபதி, பகத்பாசில் நடித்துள்ள வேட்டையன் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா புரடக்ஷன் தயாரித்துள்ளது. லால் சலாம் படத்தை தொடர்ந்து இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரும் இரண்டாவது படம் வேட்டையன் லால் சலாம் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருந்தார் அந்தப்படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. அதனால் வேட்டையன் படத்தின் வெற்றி ரஜினிக்கும், லைகாவுக்கும் முக்கியமானது.2017 ஆம் ஆண்டு கூட்டத்தில் ஒருவன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது. ஞானவேல் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் இரண்டாவது படம் வேட்டையன் என்பதால் படத்தின் கதைகளம் என்ன என்பதை அறிந்து கொள்ள சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல பொது வெளியிலும் ஏற்பட்டுள்ளது. வேட்டையன் படத்தின் டிரைலர் மூலம் என்கவுண்டர் கொலை சம்பந்தமான கதை என்பதை யூகிக்க முடிந்தாலும், என்கவுண்டருக்கு ஆதரவா, எதிர்ப்பா என்கிற விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் வேட்டையன் படத்தின் கதை வெளியாகியுள்ளது.
‘வேட்டையன்’ அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தின் டிரைலர், இசை செப்டம்பர் 20 ஆம் தேதிவெளியானது.இந்நிலையில், வெளிநாடுகளில் டிக்கெட் முன்பதிவுக்கான இணைய தளத்தில் ‘வேட்டையன்’ படத்தின் கதை சுருக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
கதை சுருக்கம் என்ன:
“கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் என்கவுன்டர் செய்துவிட, அது அவருக்கு நிர்வாக ரீதியாகபிரச்சினை ஆகிறது அவர் செய்த என்கவுன்டர் குறித்த விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலை ஏற்படுகிறது.ஒருபுறம் என்கவுன்டருக்கு சட்டப்படி காரணம் சொல்ல வேண்டும், மறுபுறம் ஊழல்வாதிகளை எதிர்த்து களமாட வேண்டும். இந்நிலையில், இதனை எதிர்த்து போராடி அவர் எப்படி மீண்டார் என்பதை சொல்கிறது படம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.