ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் உலக அளவில் நான்கு நாட்களில் 240 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி என கூறப்படுகிறது. ரஜினியின் முந்தைய படமான ‘ஜெயிலர்’ ரூ.600 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது.அந்த வகையில் ‘வேட்டையன்’ ரூ.500 கோடியை தொடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாலும், அடுத்து தீபாவளிக்கு படங்கள் வெளியாக உள்ள நிலையிலும், இது ரஜினி படத்தின் வசூலை பாதிக்கலாம் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் ஆயுத பூஜை விடுமுறை தினங்களில் வெளியான இப்படம் 4 நாட்களில் ரூ.240 கோடி மொத்தவசூலை ஈட்டியுள்ளதாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
Next Post