வைரலாகும் ரக்க்ஷிதா பாடல் காட்சி

தொலைக்காட்சி தொடர்களில் 

குடும்ப குத்து விளக்காக தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இவரது நடிப்பில்”சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்கள் பார்வையாளர்களால் ரசித்து பார்க்கப்பட்டவை.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் என பன்முக தன்மை கொண்ட
ஜே.சதீஷ் குமார் முதன்முறையாக இயக்கி உள்ள படம் ‛பயர்’. இதில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் ரச்சிதா மகாலட்சுமி, சாக்க்ஷி அகர்வால் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பாக ஏற்கனவே வெளியான சில அறிமுக வீடியோக்கள், முன்னோட்டத்தில் வாலிப வயதினரை ஈர்க்கும் விஷயங்கள் அதிகம் இருந்தன.

சில தினங்களுக்கு முன் ‛மெது மெதுவாய்’ என்ற பாடலின் முன்னோட்ட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

அதில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளித்தார்  ரச்சிதா.
பிப்ரவரி 14 ஆம் தேதி படம் வெளியாவதையொட்டி பாடலின் முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா இருவரும்நெருக்கமாக நடித்துள்ளனர்.
இதை பார்த்த ரசிகர்கள் நம்மரச்சிதாவா இப்படி நடித்துள்ளார் என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த பாடல் வலைதளங்களில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.