ஷங்கரை கவர்ந்த மாமனிதன்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள  மாமனிதன் படம் நேற்று(ஜூன் 24) உலகம் முழுவதும் வெளியானது

 இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து முதல்முறையாக இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள் யுவன்சங்கர்ராஜா தயாரித்துள்ள இப்படம் பைனான்சியருக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் பல முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டும் ரீலீஸ் ஆகாமலே இருந்தது. தயாரிப்பாளர் R.K.சுரேஷ்
தமிழ்நாடு உரிமையை வாங்கியதால் இந்த முறை அறிவித்த அடிப்படையில் நேற்று வெளியானதுஇந்த நிலையில் மாமனிதன் படம் குறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுஉள்ளார். அதில், ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை இந்த மாமனிதன் படம் கொடுத்திருக்கிறது. இயக்குனர் சீனு ராமசாமி தனது இதயத்தையும் ஆன்மாவையும் வைத்து எதார்த்தமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். விஜய்சேதுபதியின் அற்புதமான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. இளையராஜா- யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் கதையோடு ஆத்மார்த்தமாக இணைந்திருக்கிறதுஎன குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.