ஹைபர்லிங்க் கதையில் விதார்த் நடிக்கும் புதிய படம்

விதார்த் மற்றும் ஜனனி இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்து வந்த குவியம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தற்போது குவியம் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பை தொடங்கியுள்ளது.

அந்த வகையில் குவியம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் லால்குடி எம்.ஹரிஹரன் தயாரிக்கும் முதல் படத்தில் விதார்த் மற்றும் ஜனனி நடிக்கின்றனர். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுத லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார். கோவிந்த் நல்லதம்பி படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி கிருஷ்ணா குமார் இயக்குகிறார்.

இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் கிருஷ்ணா குமார் கூறும்போது, நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. எதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம் என்றார்.