ஜி.வி.பிரகாஷுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை விவகாரத்து செய்தார் ஜி.வி.பிரகாஷ். விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனால், இது எல்லை மீறி போய்விட்டது. எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இதனை நான் மறுக்கிறேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண். எதிர்மறை கருத்துகளை பரப்புவதை நிறுத்துங்கள். இந்த விவகாரத்தில் இதுவே எனது முதல் மற்றும் இறுதி அறிக்கையாக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.