” ஒண்டி முனியும் நல்ல பாடனும்” சொல்ல வரும் சேதி என்ன?

தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலத்தில் நிலவும்  அதிகாரப் போட்டி, நிலவுரிமை போராட்டம், உழைப்புச் சுரண்டல் போன்ற உண்மைகளை  சொல்ல வரும் படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும். உழைக்கும் விவசாய தொழிலாளிகளை “நல்ல பாடன்” என்று அழைப்பது கொங்கு மண்டல (ஒன்றுபட்டகோயம்புத்தூர் பகுதி) வழக்கம்.

தமிழகத்தில்கொங்குப் பகுதியின் மண்ணையும் மக்களையும், அவர்களது பண்பாட்டையும் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருக்கும் இந்தப் படம் சிறு தெய்வ வழிபாடு, நம்பிக்கைகள், நிலத்தின் தற்போதைய நிலை ஆகியவற்றை விரிவாகப் பேசுவதாக கூறுகிறது படக்குழு

திருமலை புரொடக்க்ஷன் சார்பில்

கே. கருப்புசாமி தயாரித்துள்ள ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படத்தை இயக்குநர் சுகவனம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நல்லபாடனாக ‘பரோட்டா’ முருகேசன் நடித்துள்ளார்.
திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் சுகவனம் கூறுகையில்,

 “நல்லபாடன் என்பது கொங்கு வட்டாரத்தில் நிலத்தில் உழைக்கும் பாட்டாளி மனிதனை குறிக்கும் சொல். நிலமற்ற உழைப்பாளர்களின் வாழ்க்கையை, அவர்கள் வழிபடும் சிறுதெய்வமான ‘ஒண்டிமுனி’ மீது கொண்ட நம்பிக்கையை, ஆதிக்கம் செலுத்துவோரின் சுரண்டலையும், நல்லபாடனின் போராட்டத்தையும் பதிவு செய்த படமே இது. இந்தப் படம் கிராம வாழ்க்கைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். மக்களுக்கான இந்தக் கலை, மக்களை நிச்சயம் சென்றடையும்” என்றார்.
‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ திரைப்படம் நவம்பர் 28 இல் திரைக்கு வருகிறது