ஊரில் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பல் பள்ளி மாணவ மாணவியரையும் கடத்துகிறது.இதனால் அந்தப் பள்ளி ஆசிரியை காவல்துறையில் புகார் அளிக்கிறார்.காவல்துறை ரகசியமாக புலனாய்வில் ஈடுபடுகிறது.அவர்கள் யார்? அவர்கள் என்ன கண்டுபிடிக்கிறார்கள்? என்பதையெல்லாம் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறது படம்.
உடற்பயிற்சி ஆசிரியர் வேடமேற்றிருக்கும் சுந்தர்.சி அதிரடி நாயகனாக வலம் வருகிறார்.சண்டைக்காட்சிகளில் முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார்.
வாணிபோஜனுக்கு குறைந்த வாய்ப்பு என்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார்.
நாயகன் குழுவில் இருக்கும் பக்ஸ், முனீஸ்காந்த்,விச்சு, மற்றும் சந்தானபாரதி ஆகியோரும் வில்லன் குழுவில் இருக்கும் அருள்தாஸ்,ஹரீஷ் பெரோடி, காளை மற்றும் மைம்கோபி ஆகியோரும் படத்தின் தலைப்புக்காகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சி.சத்யாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம்.பின்னணி இசையில் படத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
படம் முழுக்க வண்ணமயமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே செயல்பட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணமூர்த்தி.
படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி இன்னும் கொஞ்சம் சிந்தித்து உழைத்திருக்க வேண்டும்.
எழுதி இயக்கியிருக்கும் சுந்தர்.சி,மக்களைச் சிரிக்க வைப்பது மட்டுமே நோக்கம் என்று செயல்பட்டு இருக்கிறார்.