அங்கம்மாள்’ படத்தில் கீதா கைலாசம் முதிய தோற்றத்தில் கதையின் நாயகியாக நடித்தார். தற்போது ராதிகா ‘தாய்கிழவி’ என்ற படத்தில் ‘பவுனத்தாய்’ என்ற முதிய கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இவர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார் வடிவுக்கரசி. ‘க்ராணி’ என்ற படத்தில் 80 வயதை தாண்டிய முதிய பெண்ணாக, கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை விஜயமரியுனிவர்சல் மீடியா என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
வடிவுக்கரசியுடன் திலீபன், அபர்ணா, கஜராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். விஜயகுமாரன் இயக்குகிறார், மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார், செல்லையா பாண்டியன் இசை அமைக்கிறார். இது ஒரு பேய் த்ரில்லர் படம், இதில் வடிவுக்கரசி சூனியக்காரியாக நடிக்கிறார்.”