டாடா படத்தில்கணக்கை தொடங்கிய ரெட் ஜெயண்ட்

எஸ்.அம்பேத்குமார் ஒலிம்பியா மூவிஸ் சார்பில்தயாரித்துள்ள படம் டாடா.அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்குவதற்கு கடுமையான போட்டி நிலவியது ஒளிபரப்பு உரிமை தங்களுக்கு வேண்டும் என்று கலைஞர் தொலைக்காட்சி கூறியதால் பிற தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியில் இருந்து ஒதுங்கிகொண்டனர்

இந்நிலையில் அப்படத்தின் பிற ஏரியா வியாபாரங்களுக்கு  பலம் சேர்க்கும் வகையில் உள்ளது அந்தப்படம் பற்றிய அறிவிப்பு ஒன்று2023 ஆம் ஆண்டு தொடக்கநாளை முன்னிட்டு

 ரெட்ஜெயண்ட் நிறுவனம், இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதோடு இப்படம் 2023 ஜனவரியில்வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே எதிர்பார்ப்புக்குரிய படமாக கூறப்பட்டுவரும் சூழலில்  இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்கிற அறிவிப்பு படத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.