டிராகன் 100 கோடி வசூலை நோக்கி

விமர்சகர்கள், பார்வையாளர்களிடையே பாராட்டை பெற்று வரும் டிராகன் திரைப்படம் எதிர்பாராத வசூல் கணக்கை எட்டியுள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை வெளியான திரைப்படங்களில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் பொங்கல் வெளியீடான மதகஜராஜா மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஹிட்டடித்த படமாகும். அதனை தொடர்ந்துஅஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களிள் உலகம் முழுவதும்50 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருப்பதாவது, டிராகன் படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் 50.22 கோடிரூபாய் வசூல் செய்துள்ளது. இதில்தமிழகத்தில் மட்டும் 24.5 கோடி ரூபாய்,ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 6.25 கோடி ரூபாய் கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவில் 4.37 கோடி ரூபாய், வெளிநாடுகளில் 14.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
35 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட டிராகன் திரைப்படம்இரண்டாவது வார இறுதியில் 100 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டி சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி21 ஆம் தேதி வெளியான  ‘டிராகன்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உலகமெங்கும் அந்நிறுவனமே விநியோகித்தது. முதல் நாளைக் காட்டிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரத்தது.அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.