இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீட்டுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இப்படத்திற்கான வியாபார வேலைகள்நடந்து வருகின்றன.
இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னான ஓ.டி.டி. ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் நூற்றைம்பது கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இத்தகவல் வெளியாகி எட்டு மாதங்கள் ஆகிவிட்டன.
ஆனால் அப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை முடிவடையாமல் இருந்தது.இப்படத்தின்
தற்போது அதுவும் முடிவாகியுள்ளது.
இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி அறுபது கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தை விஜய் தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால் அதற்குப் பிரதியுபகாரமாக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கமல்ஹாசன் ஒப்புக்கொள்வார் என்றொரு தகவலும் உலவிக் கொண்டிருக்கிறது.