திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் சினிமா . ரசிகர்களிடம் தனித்த இடத்தைப் பெற்றவர். அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
சமீபத்தில், செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டார்.
70 விநாடிகள் கொண்ட இந்த டீசர், படத்தின் சுவாரஸ்யமான உலகை ஒரு சிறிய பார்வையாகக் காட்டுகிறது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த டீசரில், ஒரு சிறுமி, ஒரு ஆசிரியர் மற்றும் செல்வராகவன் இடையேயான voiceover உரையாடல் இடம்பெறுகிறது. அதனுடன் இணைந்துள்ள வலுவான காட்சிகள், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதோடு, கதைக்களத்திற்கான முன்னோட்டத்தையும் வழங்குகின்றன.
மனிதன் தெய்வமாகலாம் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ளார். விஜயா சதிஷ் மற்றும் RS சதிஷ் ஆகியோர் Vyom Entertainments நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் செல்வராகவன் , குஷி ரவி , RS சதிஷ் , கௌசல்யா , Mime கோபி, Y. G. மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், சுதா, ஜோதிக்கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசைய:AK ப்ரியன் ஒளிப்பதிவு:ரவி வர்மா K