விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷிணி, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், தீபா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ள திரைப்படம் ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாரயணன் இசைமையத்துள்ள இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 13.07.2025 மாலை சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர்விஜய் சேதுபதி,
“நிறைய சண்டை சச்சரவுகளுக்கு இடையில் தான் இந்த படமே தொடங்கியது. நான் இவருடன் பணியாற்றக் கூடாது என இருந்தேன், அதேபோல அவரும் என்னுடன் பணியாற்றக்கூடாது என இருந்தார். ஆனால் எங்களுக்குள் தனிப்பட்ட பிரச்னைகள் பெரிதாக இல்லை.
இருவருக்கும் இடையில் ஒரு பூ மலர்வதைப் போல ஒரு அன்பு மலர்ந்து, அதன்பிறகு எல்லாமே எளிதாக நடந்தது. எனக்கு 2009ல் இருந்து அவரைத் தெரியும். இந்த படம் தொடங்கியது ஒரு பெரிய சுழற்சி முடிவடைந்ததைப் போல இருந்தது. அது ஒரு அழகான அனுபவம்” என்றவர்

“மூன்றாம் பிறை படம் தயாரித்த சத்யஜோதி நிறுவனத்துடன் இணைவதில் ரொம்ப சந்தோஷம்.
மலையாளப்படத்தில் ஒரு கெஸ்ட்ரோல் பண்ணினப்ப நித்யா அறிமுகம். இருவரும் சேர்ந்து பணியாற்ற நினைத்தோம். அது இந்த படத்தில் நடந்தது மிக்க மகிழ்ச்சி. அவர் நடித்த எந்த கதாபாத்திரத்திலும் அவரைத் தவிர வேறொருவரை கற்பனை செய்துபார்க்கவே முடியாது. சும்மா வந்தோம் நடித்தோம் என இல்லாமல், எல்லாத் தேவைகளையும் புரிந்துகொண்டு நடிக்கக் கூடிய கலைஞர் நித்யா. ” என்றார்.

இந்த படத்தில் நடித்த குழந்தை மகிழ் எங்களை ஆசீர்வதிக்க வந்த தெய்வம் மாதிரி. இயக்குநர் பேப்பரில் இவ்வளவு எழுதி வச்சிருக்கார் எப்படி ஒரு வயது குழந்தை நடிக்கும் என நினைத்தோம்.ஆனால் ரொம்ப அழகாக நடிச்சது அந்த குழந்தைதான். ஒரு கட்டத்தில் எங்களைப் புரிந்துகொண்டது. ரோஷிணி, தீபா அக்கா கூட செல்லாம இருக்கும். என்னைப் பார்த்தா பயப்படும்.
கதையில் முதலில் ஆண் குழந்தை இருந்தது. மகிழினிக்காக அதை மாற்றினோம். மகிழ் வர்ற ஒவ்வொரு காட்சியும் உயிருள்ளதா, உங்களை சந்தோஷப்படுத்துவதா இருக்கும்.