இந்தியில் கடந்த மாதம் ரன்வீர் சிங் நடிப்பில் துரந்தர் திரைப்படம் வெளியாகி இப்போது வரை 1200 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. சமீப காலமாகவே சமூக வலைத்தளம் முழுவதும் துரந்தர் படம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் ஆதித்யா தர் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 2019ல் உரி சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்கிற படத்தை இயக்கி அதற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றவர்.