கேஜெஆர் ஸ்டூடியோஸ் சார்பில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர், அயலான் உள்பட சில படங்களைத் தயாரித்தவர் கேஜெஆர் ராஜேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘அங்கீகாரம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜேபி. தென்பாதியான் இயக்குகிறார். ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் பிரசாந்த் – அஜித் பாஸ்கர் – அருண்முருகன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதில், சிந்தூரி விஸ்வ நாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன் ராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.