ராஜேந்தர் இயக்கத்தில் நளினி நாயகியாக அறிமுகமான படம், ‘உயிருள்ளவரை உஷா’. கங்கா, ராதா ரவி, எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்தனர். 1983-ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.படத்தில் இடம் பெற்ற இந்திரலோகத்து சுந்தரி, வைகைகரை காற்றே நில்லு, இதயமதை கோவிலென்றேன் உள்பட அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. இந்நிலையில், இப்படம் 43 வருடங்களுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிப்.13-ம் தேதி மீண்டும் ரிலீஸ் ஆகிறது. இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது..தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ராதாரவி, நளினி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் டி.ராஜேந்தர் பேசும்போது, “இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒரிஜினல் காப்பியை பைனான்சியர்களுக்கு போட்டு காண்பித்தேன்.
இதை என் திறமைக்காகவோ, என் தலைக் கணத்துக்காகவோ சொல்லவில்லை. வாழ்க்கையில் யார், எப்போது, எப்படி வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது, ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்” என்றார்.