நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும்’ மனசும் மனசும்’

எஸ்.ஏ.எப். புரொடக்க்ஷன் சார்பில் எஸ்.அருள்பிரகாசம் தயாரித்து, இயக்கும் புதிய படம், ‘மனசும் மனசும் சேர்ந்தாச்சு’. நகைச்சுவை நடிகர் நாகேசின் பேரனும், நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஸ் நாகேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷாஜிதா நடித்துள்ளார். இவர்களுடன் கராத்தே ராஜா, சத்யன் அன்புச்செல்வி ஆகியோருடன் ஏ.நந்தகோபால் நடிக்கின்றார். ஒளிப்பதிவு: திருமலை கோவிந்தன்.

படத்தை பற்றிஅருள்பிரகாசம் கூறும்போது, ”உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் தயாராகி இருக்கிறது. ஒவ்வொருவரின் பருவ வயதில் ஏற்படும் காதல் உருவம் இல்லாமல் ஒவ்வொரு நிமிடமும் சேர்ந்தாலும், பிரிந்தாலும் நம் நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த காதலை கடக்க முடியாமல் கண்ணீருடன் காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் நம் மனநிலை தான் இந்தப் படம். பார்ப்போர் ஒவ்வொருவரின் மனதையும் இந்தப்படம் நிச்சயம் ‘ஸ்கேன்’ செய்யும். இறுதிக்கட்ட பணிகள் முடிந்து விரைவில் படம் திரைக்கு வருகிறது”, என்றார்.