நிஜங்களைபிரதிபலிக்கும்’ நிழல்’ திரைப்பட விமர்சனம்

பொது சமூகத்தில் தினசரி எங்கோ ஓர் இடத்தில் அதிகாரவர்க்கம், அரசியல் அதிகாரம் நிரம்பியவர்களால் வலிமையற்றவர்கள் வேட்டையாடப்படுவதும், பெண்கள் பாலியல் திண்டலுக்கு ஆளாவதும் நடந்து வருகிறது. அதன் பாதிப்பில் எழுதப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது ‘நிழல்’பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் பாதிக்கப்படும்  பெண்களே பழிவாங்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதை பதிவு செய்துள்ளார் இயக்குநர்ஏ.கே. குமார்

பிக்பாஸ் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான ஜனனிகதைநாயகியாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகர்களாக விசாகன், கெளசிக் மற்றும் ரமேஷ்கண்ணா, திவ்யா கிருஷ்ணன், அபிஷேக் சங்கர், சபிதா ஆனந்த், பாய்ஸ் ராஜன்  நடித்துள்ளார்கள்.  

தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறார் ஜனனி, அவருக்கு ஒரு தங்கை. போலீஸ் இன்ஸ்பெக்டர் கனவில்  ஜனனியின் காதலர். ஒருநாள் காதலருடன் வெளியில் செல்வதற்காக, தன்னைப் போலவே இருக்கும் தங்கையை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கிறார்.  

மருத்துவனை முதலாளி மகன் கும்பலால் எதிர்பாராத சூழலில் சிக்குகிறார் அந்த தங்கை. அதனால் ஏற்படும் விளைவுகள் ஜனனியை நிழலாகத் தொடர்கின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார், பெண்களை போகப் பொருளாக பயன்படுத்தும் ஆண்களுக்கு அவர் அளிக்கும் தண்டனை என்ன என்பது படத்தின் கதை. 

துள்ளளாகப் பேசிக்கொண்டு தோழிகளுடன் குதூகலிக்கும் மருத்துவராக ஜனனியின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. அதிரடி காட்சிகளில்அவரைப் பார்ப்பது புதியதாக தோன்றினாலும், அந்தக் காட்சிகளை நம்பும்படி நடித்திருக்கிறார். 

நடுத்தரவர்க்கத்து தந்தையாக ரமேஷ்கண்ணா. குற்றங்களை எளிதாக கண்டறியும் நவீன காலத்தில் ஒரு சாமான்ய பெண் மூன்று பேரை தாக்கிவிட்டு தப்பிக்கமுடியுமா என்ற கேள்வி படம்பார்ப்போருக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 

கிரைம் த்ரில்லர் வகையிலான இந்த படத்தில் மெல்லிய காதலும் இருக்கிறது. பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்குத் துணை செய்கிறது. பூ ஒன்று புயலாக மாறினால் என்ன நடக்கும்  என்பதை எதார்த்தமாகச் சொல்லி இருப்பதில் வெற்றிகண்டிருக்கிறார் இயக்குநர்.