நெப்போலியன் நடிக்கும் அமெரிக்க ஆவி அமெரிக்காவில் தயாராகிறது

தமிழ்சினிமாவில் குறுகிய காலங்களில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தில் முதியவராக அறிமுகமான நெப்போலியன் பின்னர் கதாநாயக நடிகராக முன்னேற்றமடைந்தார்.

திமுக, பாஜக கட்சிகளில் உறுப்பினார இருந்துமத்திய அமைச்சர் பதவி வரைக்கும் உயர்ந்தவர் நெப்போலியன். ஆட்டிசம் பாதித்த தன் மகனின் மருத்துவத்திற்காக அமெரிக்கா சென்றவர், அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

தற்போது அமெரிக்காவில் விவசாயத்தை தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்,அவ்வப்போது இந்தியா வந்து சில படங்களிலும் நடித்து விட்டுச் செல்கிறார். தற்போது ‘அமெரிக்க ஆவி’ என்ற படத்தை அங்கேயே தயாரித்து அதில் நடித்தும் வருகிறார்.

இது குறித்து நெப்போலியன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது

உலகெங்கும் வாழும் எனது அன்பு நண்பர்களே, தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம். உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும், புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்து, அந்த படத்தை எனது மகன்கள் தனுஷ் மற்றும் குணால் ‘அமெரிக்க ஆவி’ என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர்.

அதற்கான கதை தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த

ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளோம்.

மேலும், இப்படம் அதிக பொருட் செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ எனும் படத்தை 2017 ஆம் ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும், இப்படத்திற்காக தொழில் நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற் கட்ட வேலைகள் தொடங்க இருக்கிறது”. என்று பதிவிட்டுள்ளார்.