பராசக்தி கதை என்ன?- சுதா கொங்கரா

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நடைபெற்றபோராட்டத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.

1937 – 1940சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி(1937 – 1940) இருந்த போது கல்வி நிலையங்களில் இந்தியை கட்டாயமாக்கினார்.
இதனை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பலர் உண்ணாவிரதம், மறியல், ஊர்வலம், மசோதா எரிப்பு எனப் போராடினர்.
நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறையில் உயிரிழந்தனர். போராட்டம் காரணமாக1940-ல் இந்தி கட்டாயக் கல்வி உத்தரவை அரசு திரும்பப் பெறப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபின் 1965 ஆம் ஆண்டுஇந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழி என மத்திய அரசு அறிவித்தது. அதன் காரணமாக.தமிழகம் முழுவதும் மாணவர்கள் தலைமையில் மாபெரும் போராட்டம் வெடித்தது,ஆங்கிலம் தொடர்ந்து அலுவல் மொழியாக நீடிக்கவும், இந்தி திணிப்பு தடுக்கப்படவும் இந்த போராட்டங்கள் முக்கிய பங்காற்றின. இதனை அடிப்படையாக கொண்டு பராசக்தி திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

2025 ஜனவரி 14 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு 18.12.2025 மாலை சென்னை வள்ளுவர்கோட்டம் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா பேசுகிற போதுஇது இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் கதைதான். 1960கள் எப்படி இருந்தது என்பதை இந்த தலைமுறைக்கும் காட்டும் படம்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டம் அது. பல மறைக்கப்பட்ட உண்மைகளையும் படம் பேசுகிறது.
சிவகார்த்திகேயனும், அதர்வாவும் அண்ணன் தம்பிகள், மதுரையை சேர்ந்தவர்கள். சிவகார்த்திகேயன் அரசு வேலையில் இருக்கிறார். அதர்வா என்ஜினீயருக்கு படிக்கிறார். இருவரும் பாசத்தோடு இருந்தாலும் இரு வேறு கொள்கைகளை கொண்டவர்கள். அவர்களுக்கு கருத்து மோதல்கள் இருக்கிறது. சிவா அமைச்சர் மகள் ஸ்ரீலீலாவை காதலிப்பார். சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் இந்த 3 பேர் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படம்.ஏராளமான ஆய்வுகள் செய்து, கடந்த 5 ஆண்டுகளாக இதற்காக பணியாற்றி படம் உருவாகி உள்ளது. ரவிமோகன் வில்லனாக நடிக்கிறார். அவருக்கும், சிவாவுக்கும் ரியலான சண்டை காட்சிகள் இருக்கிறது என்றார்.