ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்து தயாரித்துள்ள படம் இரவின் நிழல் இந்தப்படம் கடந்த ஒரு வருடகாலமாக உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது சூலை 15 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இரவின் நிழல் படைப்புரீதியாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது அதேவேளை நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம், மிகப்பெரும் சாதனை, தமிழ் சினிமாவுக்கு பெருமை என்று திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருகிறது படத்திற்கு திரையரங்குகளில் வணிகரீதியாக எதிர்பார்த்த வசூல் இல்லை என்ற நிலையில் தமிழகம் முழுவதும் நடிகர் பார்த்திபன் படம் வெளியான திரையரங்குகளில் இடைவேளை நேரத்தில் நேரில் தோன்றி பார்வையாளர்களிடம் பேசி வருகிறார் இதன் காரணமாக கடந்த சனி, ஞாயிற்றுகிழமைகளில் வசூல் அதிகரித்து உள்ளது படம் பற்றிய சாதமான அல்லது எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டுள்ளது இதன் காரணமாக சமூக வலைதளங்களில் இரவின் நிழல் விவாத பொருளாக இருந்து வருகிறது படம் வெளியான சூலை 15 அன்று திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன் இரவின் நிழல் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை ஏற்கனவே இது போன்ற படங்கள் வெளிவந்துவிட்டது என தனது டிவிட்டர் பதிவில் கூறியிருந்தார் அதற்கு பார்த்திபன் தனது பாணியில் நக்கல் நய்யாண்டியுடன் பதில் கூறியிருந்தார் அத்துடன் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது என்று இருந்த நிலையில்
புதுச்சேரியில் ஒருபடி மேலே போய் புளு சட்டை மாறன்உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து,கொடும்பாவி கொளுத்தியுள்ளனர்புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ப்ரோவிடண்ட் மால் திரையரங்கில் படம் பார்த்த புதுச்சேரி நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பார்த்திபன் ரசிகர்கள் திரையரங்க வாயிலில் படம் குறித்து மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும் செருப்பால் அடித்தும்
அவரது உருவ பொம்மைக்கு தீயிட்டு கண்டனம் தெரிவித்த செய்தியும், அது சம்பந்தமான வீடியோவும் வெளியாகியுள்ளது இது சம்பந்தமாக புளு சட்டை மாறனிடம் பேசியபோது
புதியபாதை படத்தில் அன்றைய சூப்பர்ஸ்டார்கள் நடிக்கவில்லை பார்த்திபன்தான் நாயகனாக நடித்திருந்தார் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது காரணம் திரைக்கதை அது போல்தான் இரவின் நிழல் படத்தையும் பார்க்கிறேன் நான் தேடிய கூகுளில் இந்தப்படம் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக காட்டவில்லை நான் கூறிய கருத்தை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் முதலில் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என கூறிய படத்தை பார்த்தார்களா என தெரியவில்லை பார்த்தால் நான் கூறியது உண்மை என்பது புரியும் என்றவரிடம்
பாண்டிச்சேரியில் அவரது கொடும்பாவி எரிப்பு சம்பந்தமாக கேட்ட போது
மகிழ்ச்சியாக இருக்கிறது 40 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன் அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கு எதிராக நடைபெறும் போரட்டங்கள் போன்று சாமான்யனான எனது கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து
வந்தனர் இப்போது வீதியில் இறங்கி போராடுவது என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது, கவனப்படுத்தியிருக்கிறது எனது விமர்சனம், கருத்துக்கள் பொதுவெளியில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது எனது பொறுப்பு கூடியிருக்கிறது என்றார் சிரித்துக்கொண்டே
வீடியோ பேட்டி வேண்டும் என்றபோது
நான் பொதுவாக பேட்டி கொடுக்கிற அளவுக்கு பெரியவன் இல்லை படம் இயக்குகிறபோது அந்தப்படம் சம்பந்தமான நிகழ்வுகளில் பேசுவது, கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு சரி மற்றவர்களை போன்று பேட்டி கொடுக்கிற அளவுக்கு நான் விஐபி இல்லை என்பது எனது கருத்து என்றார்
பாண்டிசேரியில் புளுச்சட்டை மாறன் கொடும்பாவி எரிப்பு சம்பந்தமாக பேசியபோது
இப்போ வெளிவருகிற படத்தின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒரு வாரம் அதற்குள் படம் நன்றாக இருக்கிறது என்கிற கருத்து பொதுவெளியில் உருவாக வேண்டும் இல்லை என்றால் படம் போனியாகது இதனை புரிந்துகொண்டவர்கள் படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்தி வெற்றி பெறுகிறார்கள் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள்
ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதற்காகவே படத்திற்கான வசூல் அதிகரித்துவிடாது அதிலும் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்தது, அதைப் பற்றி எதிர்மறையான கருத்து கூறியதற்காக இது போன்று போராட்டம் நடத்துவது சரி என கூற முடியாது தான் தயாரித்த படம் சூப்பர் என தயாரிப்பாளர் கூறுவது போன்று அந்தப் படத்தை டிக்கட் எடுத்து தியேட்டரில் படம் பார்க்கின்றவர் விமர்சிப்பதற்கு உரிமை உள்ளது அதைவிட்டு படத்தை ஓடவைக்கவும், விளம்பரபடுத்தவும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனரோ என்கிற கருத்தை உருவாக்கவே பாண்டிச்சேரியில் நடந்த சம்பவங்கள் உதவும் என்றவர்
பத்தாண்டுகளுக்கு முன்புவரை புளுசட்டை மாறனை எல்லா சினிமாகாரர்களுக்கும் தெரியாது அப்படி ஒரு நபர் யுடியுபில் சினிமா விமர்சனம் பேசுகிறார் என்பதே தமிழ் சினிமாவில் நடைபெற்ற சினிமா விழாக்களில் புளுசட்டை மாறனை திட்டுவதாக நினைத்துக்கொண்டு அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்தான் அதன் விளைவு சினிமாவை கடந்து அரசியல் கட்சி தலைவர்களின் அறிக்கைகளுக்கு இணையாக புளு சட்டை மாறன் கருத்துக்களை தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் என வெளியிடுகிற சூழலை உருவாக்கியவர்கள் சினிமாகாரர்கள்தான் என்றனர்