பெத்தி- திரைப்பட விமர்சனம்

  • சரவண சுப்பைய்யா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தில் இருந்த ஒரு கிராமத்தை ஆவணங்களில் இல்லாமல் செய்திருப்பார்கள். அதனை உலகுக்கு தெரிவிக்க நாயகன் போராடுவார்

    பெத்தி படத்தில்அதேபோல எந்த அரசு ஆவணங்களிலும் இல்லாத கிராமத்துக்கு அங்கீகாரம் பெற போராடுகிறார் கதாநாயகன்.
    அதில் பல தடைகள்.அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை நீண்ட திரைப்படமாக விரிகிறது பெத்தி
    தனதுகிராமத்துக்கு அங்கீகாரம் பெற நாயகன் ராம்சரண் தேர்ந்தெடுக்கும் வழி,விளையாட்டுப்போட்டி.விளையாட்டு வீரர்களுக்குரிய துடிப்பு சுறுசுறுப்பு வேகம் ஆகியன ராம்சரணுக்குக் இயல்பாக வருகிறது.
    நாயகியாக மறைந்த ஶ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் நடித்திருக்கிறார்.பாடல்களில் குத்தாட்டம், காட்சிகளில் கவர்ச்சி என முழுமையான மசாலா படங்களில் நாயகிகளுக்கு என்னஇடமோ? அந்த  இடம்தான் அவருக்குக் கிடைத்திருக்கிறது.அதில் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

    மல்யுத்த ஆசிரியராக நடித்திருக்கும் சிவராஜ்குமார், கம்பீரத்துடன் வலம் வருகிறார்.அவருடைய காட்சிகளும் வசனங்களும் படத்தின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றன.

    ஜெகபதி பாபு தன் அனுபவ நடிப்பால் பாத்திரத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.திவ்யேந்து சர்மா,பொமன் இராணி ஆகியோருடைய வேடங்களும் அவற்றில் அவர்களுடைய நடிப்பும் படத்துக்கு பலம்.

    ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு கதை நிகழும் காலத்திற்கும், இடத்திற்கும் நம்மை அழைத்து செல்கிறது.

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்திருக்கின்றன.வழக்கம்போல்,தன் பின்னணி இசையால் காட்சிகளுக்கு மெருகேற்றியிருக்கிறார்.
    நவீன்நூலியின் படத்தொகுப்பினால் சில காட்சிகள் வேகமாக இருக்கின்றன.பல காட்சிகள் நீளமாகத் தெரிகின்றன.

    ஒருபக்கம் உலகளவில் முன்னணி நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது என்கிற விளம்பரங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களும் இருக்கின்றன என்பதை முகத்திலறைந்தாற்போல் சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் புச்சிபாபுசனா.

    அப்படிச் சொன்னதோடு நில்லாமல் அதற்கு நேர்மறையாக ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறார்.