‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4கே தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது.
தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்தப்படத்தை மறுவெளியீடு செய்கிறார்
இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு ஆகஸ்ட்8 மாலை இந்தப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான்,மன்சூர் அலிகான், நாயகி ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், இயக்குநர்கள் எஸ்.ஏசந்திரசேகர்,ஆர்.வி.உதயகு
நிகழ்வில்,இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் பேசும்போது….,
எனக்கு அரசியல் மீது,சமுதாயத்தின் மீது இருக்கும் கோபங்களை எல்லாம் கொட்ட வேண்டும்.அதை திரைப்படத்தின் மூலம்தான் கொட்ட வேண்டும்.அப்படி எனக்குக் கிடைத்த பவர்ஃபுல்ஹீரோ தான் விஜயகாந்த். வேறு எந்த ஹீரோவையும் நான் தேடிப்போகவில்லை..