அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள்கேட்டுக்கொண்டதற்கிணங்
காவலர்கள் கோயம்புத்தூரில் உள்ள உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இராணுவ உதவியைக்கேட்டனர். அதன்படி, ஆறு வண்டிகளில் இராணுவத்தினர் பொள்ளாச்சிக்கு ஏறத்தாழ நடுப்பகலின்போது வந்து சேர்ந்தனர்.
1938 லிருந்து தமிழ்நாட்டில்
படத்தில், இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடும் புறநானூற்றுப் படை எனும் மாணவர் அமைப்பை தலைமை தாங்கி வழிநடத்துகிறார் நாயகன்சிவகார்த்திகேயன்.
அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறது படம்.
மொழிப்போர் வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.அவருடைய தோற்றம்,உடைகள் மற்றும் உடல்மொழி ஆகியன அந்தக்காலகட்டத்தை அப்படியே பிரதியெடுத்தது போல் அமைந்திருக்கின்றன.இது ஒரு திரைப்படம் நாம் நடிக்கிறோம் என்றில்லாமல் செழியன் என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீலீலா கதாநாயகனைக் காதலிப்பதோடு நில்லாமல் கதையிலும் ஒரு பாகமாய் இருக்கிறார்.நன்றாக நடித்து பலம் சேர்த்திருக்கிறார்.
காவலதிகாரியாக நடித்திருக்கும் ரவிமோகன், கண்களிலேயே வில்லத்தனம் காட்டி
அதர்வாவுக்கு இது மிக நற்பெயர் பெற்றுத்தரும் படம். துடிப்பும் துள்ளலுமான கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராணா டகுபதி,பசில் ஜோசப் ஆகியோரும் நன்று.
ஒளிப்பதிவாளர் ரவிகே.சந்திரன், கலை இயக்குநர் அண்ணாதுரை, உடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோர் உழைப்பால் நாம் காலச் சக்கரத்தில் ஏறி அறுபதாண்டுகள் பின்னோக்கிச் சென்ற உணர்வு ஏற்படுகிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் காதல் பாடல்கள் குளிர் மழையாகவும் கொள்கைப் பாடல்கள் எரிமலையாகவும் இருக்கின்றன.
பின்னணி இசையில் முறுக்கேற்றியிருக்கிறார்.
இயக்குநர் சுதாகொங்கரா, வரலாற்றை ஊன்றிப் படித்து அதன் வீரியம் குறையாமல் திரை மொழியில் கொடுத்திருக்கிறர்.