சமூகசேவகியான ஆண்ட்ரியா வசமிருக்கும்440 கோடி கறுப்பு பணத்தை நடிகர் எம்.ஆர்.இராதா முகமூடியணிந்த கூட்டம் கொள்ளையடிக்கிறது.தனியார் துப்பறிவாளராக இருக்கும் நாயகன் கவின் அதுகுறித்து விசாரிக்கிறார்.
அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன்,அதற்குத் தக்க நடித்து பாராட்டுப் பெறுகிறார்.
சார்லி, வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியன், ரெடின் கிங்ஸ்லி உட்பட படத்தில் நிறைய நடிகர்கள்.ஒவ்வொருவரும் தங்களைக் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
ஜாக்கி, எம்.விஜய் அய்யப்பன் ஆகியோரின் கலை இயக்கம் படத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
வெறுமனே காட்சிகளாகக் கடந்து போகாமல் எல்லாவற்றையும் ரசித்துப் பார்க்கும்படி ஒளியமைப்புகள் மற்றும் கோணங்களை வைத்து படத்துக்குப் பெரும்பலமாக இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.
படத்தொகுப்பாளர் ஆர்.ராமருக்குக் கூடுதல் பணிச்சுமை கொடுத்திருக்கிறது படம்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில்,கண்ணுமுழி,வெற்றி வீரனே உள்ளிட்ட பாடல்கள் திரைக்கதைக்கு உதவியிருக்கின்றன.பின்னணி இசையால் படத்துக்கு உரமேறியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் விகர்ணன் அசோக்.இயக்குநர் நெல்சனின் குரலில் படத்தை நகர்த்திச் செல்வது உள்ளிட்ட உத்திகளால் பலவீனங்களை மறைக்க முயன்றிருக்கிறார்.
இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் பழைய இலக்கணத்தைத் தாண்டி கொஞ்சம் மாற்றிச் சிந்தித்திருக்கிறார்.நடுத்தர மக்களுக்குக் கோபம் வந்தா நாடு தாங்காது என்கிற கருத்தைச் சொல்ல விழைந்திருக்கிறார்.
ஒரு கதை, அதைச் சரியாக எடுத்துச் செல்ல கவின்,ஆண்ட்ரியா போன்ற நடிகர்கள்,வலிமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லாமிருந்தும் கதை சொல்லவில் வலிமை வறுமையாகவே இருக்கிறது.