மலையாள சினிமாவின் முகமான நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவர் நடித்து வரும் ‘விருஷபா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
மோகன்லால் தனது ஊடக பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ”இது சிறப்பு வாய்ந்தது. என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். இத்துடன் இதற்கான காத்திருப்பு நிறைவடைகிறது. பெருமிதத்துடனும், ஆற்றலுடனும் புயல் விழித்தெழுகிறது. உங்கள் ஆன்மாவை தூண்டும் வகையிலும்.. காலத்தை எதிரொலிக்கும் வகையிலும்.. உருவானதொரு கதையான ‘விருஷபா’வின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறேன்.
எனது பிறந்தநாளில் இதை வெளியிடுவது மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. உங்களது அன்பு எப்போதும் எனக்கு மிகப்பெரிய சக்தியாக இருந்து வருகிறது. விருஷபா அக்டோபர் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது” என பதிவிட்டிருக்கிறார்.
நந்தகிஷோர் எழுதி, இயக்கி, கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் ‘விருஷபா’- அதிரடி- உணர்வு பூர்வமான டிராமா மற்றும் புராணங்களை தடையின்றி இணைத்து வழங்கும் ஒரு சினிமா அனுபவமாகும். மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் பிராந்திய மற்றும் மொழியியல் எல்லைகளைக் கடந்து எதிரொலிக்கும்… ஒரு உண்மையான கலாச்சார ரீதியாக வேரூன்றிய அனுபவத்தை வழங்கும் என்பதையும் உறுதி செய்கிறது.
2025 அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் விருஷபா வெளியிடப்பட உள்ளது.