புளூ ஸ்டார் படத்தை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் மலை யோகிபாபு , லக்ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷமூர்த்தி
நடித்திருக்கும் இந்த படத்தை
அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார்.
மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது.
அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள்.
Related Posts
மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான். இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி , இனம் என்று பிரிந்து நின்றுகொண்டு சக மனிதர்கள் மீது அன்பை மறந்து எதிர்கால சந்ததியினரின் வாழ்வை குறித்து கவலைப்படாமல் மனித பேராசை இயற்கையை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த கதை மனிதனின் சுய நல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப்பற்றிய ஒரு படைப்பாக வந்திருக்கிறது.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இமான் இசையமைத்திருக்கிறார்.
இந்த நிலையில் ‘மலை’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.