ராதாரவி – ரவிமரியா இணையும் புதிய படம் ஹீரோ By admin Last updated Dec 31, 2025 Share கதையின் நாயகர்களாக ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் படத்தை, ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து, இயக்கிய ராம்தேவ் இயக்குகிறார். கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு, நிழல்கள் ரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தைக் கண்ணகி மைந்தன் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது, ”இது அரசியல் நையாண்டி, காமெடி திரைப்படம். சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தேனியில் தொடங்குகிறது. Continue Reading Share FacebookTwitterWhatsAppPinterestFacebook MessengerTelegram