வடம் – திரைப்பட விமர்சனம்

தமிழர்களின் பாரம்பரிய மாடுபிடி விளையாட்டுகளுள் ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு விளையாட்டுகள் அதை மையமாகக் கொண்ட படம் “வடம்”

படத்தின் நாயகன் விமல், நேர்மையானஅடிதடி,வம்பு வழக்கு என்று இருப்பவர்.இன்னொரு பக்கம் மஞ்சுவிரட்டுக்காளைக்குச் சொந்தக்காரர்.யாராலும் அடக்கமுடியாத காளையை வைத்திருப்பவர் என்கிற பெருமையும் உண்டு.ஒருகட்டத்தில் காளை உடல்நலம்குன்றி சிகிச்சைக்குப் போகிறது.

மற்றொரு பக்கம்,இவரைக் கொலை செய்ய முயற்சி நடக்கிறது? இவற்றால் நொந்துபோயிருக்கும் நேரத்தில் நாயகியைச் சந்திக்கிறார்.காதல் ஏற்பட்டு
மறுமலர்ச்சி அடைகிறார். ஆனால் அது நீடிக்கவில்லை.ஏன்? எதனால்? அதன்பின் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் “வடம்” .
மாடுபிடிவீரராக நடிப்பதற்குத்தான் நிறைய மெனக்கெட வேண்டும் மாடுவளர்க்கும் வீரர் என்பதால் தம் இயல்புக்கு மாறாமல் நடித்திருக்கிறார் விமல்.காதலியின் வருகையில் மகிழ்ச்சியும் அதன்பின் ஏற்படும் அதிர்ச்சியும் அவர் நடிப்பில்
வெளிப்படுகிறது.முறுக்குமீசை தோற்றம் அவருக்கு பலமாக அமைந்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் சனஷ்காஸ்ரீ, அழகான புதுவரவு.முதல்படத்திலேயே கனமான வேடம்.

எதிர்நாயகனாக நடித்திருக்கும் நட்டி, அதற்கு எப்போதுமே பொருத்தமானவர்தான்.இந்தப்படத்திலும் குறை வைக்காமல் நிறைவாக நடித்திருக்கிறார்.

முனீஷ்காந்த்துக்கு இந்தப்படத்தில் மிக முக்கிய வேடம்.அதில் சரியாக நடித்துவரவேற்பைப் பெறுகிறார்.

விமலின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன்,அம்மாவாக நடித்திருக்கும் இந்துமதி,அத்தையாக நடித்திருக்கும் தீபா சங்கர், உறவினராக நடித்திருக்கும் பால சரவணன், பகையாளியாக நடித்திருக்கும் மதுசூதனன் ராவ் ஆகிய அனைவரும் அசல் கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

பிரன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவில் மஞ்சுவிரட்டு காட்சிகள் கண்களில் நிறைகின்றன.

டி.இமானின் இசை, இந்தப்படத்தில் இன்னொரு நாயகன்போல் இருக்கிறது.பாடல்கள் அனைத்தும் கேட்டு ரசிக்கும்படி இருக்கிறது.

சாபு ஜோசப்.வி.ஜெ,வின் படத்தொகுப்பு, பார்வையாளர்களுக்கு புதியபுதிய விசயங்களைக் கற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் கேந்திரன்.வி.சவாலான கதைக் களத்தை எடுத்துக்கொண்டு அதைச் சரியாகக் கொடுத்துவிட வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார். புலனாகிறது.நான்கு ஐந்து கதைகளை வைத்துக் கொண்டு அவற்றைச் சரியான புள்ளியில் இணைத்திருப்பது அவருடைய பலம்.