பெற்றோரின் விருப்பபடி காவல் துறையில் பணியில் சேருகிறார் நாயகன்.ஆனால் அந்த வேலை அவர் மனதுக்குப் பிடித்தமானதாக இல்லை.அங்கு அவருக்கு நிறைய கேலிகள் கிண்டல்கள் அவமானங்கள்.இதனால் வெகுண்டெழுகிறார்.அந்த மனநிலையில் அவர் செய்யும் வேலை பெரிய சிக்கலுக்கு ஆளாக்குகிறது.அது என்ன? அதன் விளைவென்ன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் வாரண்ட்.
அமைதியான முகம்,மிரட்சியான கண்கள்,கொழுக் மொழுக்கென்ற உடல் ஆகிய காவல்துறைக்குப் பொருத்தமேயில்லாத ஒருவர்,காவல்துறை பணியில் இருக்கிறார் என்பதே சுவாரசியம்.அதில் அவருடைய செயல்பாடுகள் கூடுதல் சுவாரசியம்.இயக்குநர் வேலையை மட்டும் பார்க்காமல் இவருக்கு ஏன் இந்த வேலை? என்று யாரும் கேட்டுவிட முடியாதபடி கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.
நாயகிகளாக நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி என மூன்றுபேர் இருக்கிறார்கள்.ஒவ்வொருவருக்கு
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல்,அம்மாவாக நடித்திருக்கும் கெளசல்யா,காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் அருள்தாஸ்,காவலராக நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி மற்றும் கொடைக்கானல் சரவணன் ஆகியோரும் நன்றாக நடித்து தொடருக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
தொடருக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் அசோக்குமார்,திரைக்கதையின் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி அதற்கேற்ப ஒளியமைப்பு செய்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
சாம்.சி.எஸ் பின்னணி இசைத்திருக்கிறார்.அதனால்,
பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன் ஆகியோரது கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.காவல்துறை
விக்னேஷ் நடராஜன் இயக்கியிருக்கிறார்.எழுத்திலும் அவர் பங்களிப்பு இருப்பதால் காட்சிகள் அமைப்பதில் தெளிவு இருக்கிறது.விலங்கு தொடருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்திருப்பதால் ரசிகர்கள் வாரண்ட் இல்லாமலே வந்துவிடுவார்கள்.