12 நாட்களில் 12.5 கோடி வசூல் செய்த PT சார் திரைப்படம்

 

“மீசைய முறுக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி வைத்திருப்பவர்  இசையமைப்பாளர் ஹிப் ஆப் ஆதி.தற்போது,  ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ’பி.டி. சார்’ என்ற படம் கடந்த மே 24 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் தமிழ்நாட்டில் 12 நாட்களில் 12.50 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதை முன்னிட்டு நேற்று

 சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
 இந்த விழாவில் படக்குழு, “பிடி சார் திரைப்படம் 12 நாளில் ரூ.12.5 கோடி வசூலித்துள்ளது. இன்னமும் பல திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது” என படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் காஷ்மிரா பர்தேசி, பிரபு, பாக்யராஜ், பாண்டியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.