தமிழ் சினிமா ஆண்டு கடைசியில் 241 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியீட்டுடன் முடிவுக்கு வந்துள்ளன. இந்த 241 படங்களில் குடைசாய்ந்த கோபுரங்கள் அதிகம். கோபுரத்தை தொட்ட சாமான்யர்கள் குறைவு என்றே கூறலாம் 241 படங்களுக்கான முதலீடாக கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி தயாரிப்பு நிறுவனங்கள், சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் முதன்முறை பட தயாரிப்பில் முதலீடு செய்த தொகை என சரியாக அல்லதோராயமாக கணக்கிட்டால் சுமார் 3000ம் கோடி ரூபாய் இருக்கும். முதல்முறை படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை முழுமையாக வியாபாரம், வசூல், பிற உரிமைகள் மூலம் பெற முடியவில்லை. இந்த வருடத்தில் அதிகபட்ச வசூல் செய்த படங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொடர்ச்சியாக படத்தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளே. சிறுபட்ஜெட்டில் அறிமுக இயக்குநர்கள் இயக்கிய டாடா, குட் நைட், போர் தொழில், இறுகப்பற்று, பார்க்கிங், அயோத்தி, சித்தா, ஆகிய படங்கள் பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில் களமிறங்கி படைப்புரீதியாகவும், வசூல் அடிப்படையிலும் பட்ஜெட்டுக்கு ஏற்ப அபரிமிதமான வசூலை குவித்திருக்கின்றன. இந்த படங்களை இயக்கிய அனைத்து இயக்குநர்களும் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.ஏற்கனவே ஜனவரி – சூன் வரையில் வெளியான படங்களின் வெற்றிதோல்விகளை பதிவு செய்திருக்கிறோம். சூலை – டிசம்பர் இறுதிவரை 133 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர், விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா, விக்ரம்பிரபுவின்இறுகப்பற்று, விஜய் நடிப்பில் வெளியான லியோ, கார்த்திக் சுப்ராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் X, ஹாரிஷ் கல்யாணின் பார்க்கிங், ஃபைட்கிளப் ஆகிய ஒன்பது படங்கள் மட்டுமே வணிகரீதியாக திரையரங்குகளில் வசூலை செய்த படங்களாகும். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி முதல் முறையாக திரைப்படதயாரிப்பில் தமிழ் சினிமாவில் முதலீடு
செய்தLGM படம் வெற்றிபெறவில்லை.சந்தானம் நடிப்பில் வெளியான DD ரிட்டன்ஸ், கிக், 80s, இயக்கத்தில் பாரதிராஜா, கெளதம் மேனன் நடித்த கருமேகங்கள் கலைகின்றன, சேரன் நடிப்பில் வெளிவந்த தமிழ் குடிமகன், ஏகப்பட்ட பில்டப்புகளுடன் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரணாவத் நடித்த சந்திரமுகி, மனோஜ் பாரதி இயக்குநராக அறிமுகமான மார்கழி திங்கள், ராஜுமுருகன் இயக்கிய ஜப்பான், நயன்தாரா நடித்த அன்னபூரணி ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்கி வசூல் அடிப்படையில் வெற்றி பெறவில்லை. விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு தமிழர்கள் எதிர்ப்பு காரணமாக நடிக்காமல் விலகி கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக் படமான 800 இந்தி, தமிழில் தயாரிக்கப்பட்டு வெளியானது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் மிட்டல் நடித்த இப்படம் வந்த சுவடே தெரியாமல் திரையரங்குகளை விட்டு வெளியேறியது. லாபத்தை மட்டுமே பிரதானமாக கொண்ட சினிமாவில் மசாலா படங்களுக்கு மத்தியில் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பயோபிக் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதன் இசை ஒலி நாடாவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு சிறப்பித்தார். கக்கன் என்ற பெயரில் அப்படியொரு படம் வெளியானதே தெரியாமல் போனது குறிப்பிடத்தக்கது. 2022ல் 188 நேரடி தமிழ் படங்கள் வெளியானது. இந்த வருடம் கூடுதலாக 53 திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் வெற்றிபெற்ற படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. தோல்வி படங்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. சினிமா தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புக்கு மட்டுமே அதிகரித்த படங்கள் பயன்பட்டிருக்கிறது.
231.ஜெய் விஜயம்
232.மதிமாறன்
233.மூத்தகுடி
234.மூன்றாம் மனிதன்
235.நந்திவர்மன்
236.ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
237.பேய்க்கு கல்யாணம்
238.ரூட் நம்பர் 17
239.சரக்கு
240.டிக் டாக்
241.வட்டார வழக்கு