தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜீத் குமார் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் 600 க்கும் மேற்பட்ட திரைகளில் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் சூர்யா நடித்து முடித்துள்ள கங்குவா திரைப்படம் இடம்பெறவுள்ளது.இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கங்குவா செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ள கங்குவா படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏ.ஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளிலும் உலகம் முழுவதும்6000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, நடிகர் சூர்யா நடித்து அதிக திரைகளில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.