அப்படத்தின் மூலம் இயக்குநரானார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்,கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
அப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பையும், வெற்றியும் பெற்றது.விஜய்சேதுபதி தனிக் கதாநாயகனாக நடித்து பெரிய வெற்றி பெற்ற படம் இது என்கிற அடையாளத்தையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்த படம்.
இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கத் திட்டமிட்டு வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார், அதற்குப் பிறகு மெய்யழகன் படத்தை இயக்கியிருந்தார். கார்த்தி அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மெய்யழகன் அண்மையில் வெளியானது.உணர்வுப்பூர்வமாக உறவுகளை நேசிக்கும் கதை கொண்ட அப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து,அவருடைய பெரும் பலமான 96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை விஜய்சேதுபதி த்ரிஷா ஆகியோரிடம் சொல்லியிருக்கிறார்.
அவர்களுக்கும் கதை பிடித்துவிட்டதாம்.அதனால் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.முதல் பாகத்தில் நாயகி த்ரிஷா மனம் நிறைய காதலைச் சுமந்து கொண்டு சிங்கப்பூர் கிளம்பிப் போயிருப்பார்.
அதனால் அங்கிருந்தே இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை தொடங்கவிருக்கிறதாம்.இரண்டாம் பாகத்தின் கதை முழுக்க சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடப்பது போல் எழுதப்பட்டிருக்கிறதாம்.அதனால் மொத்தப் படப்பிடிப்பையும் அங்கேயே நடத்திவிடுவது என்கிற முடிவை எடுத்திருக்கிறார்களாம்.
இதற்காக படப்பிடிப்பு நடத்தும் இடங்கள் தேர்வு செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.
இரண்டாம் பாகத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுவிட்டன என்று சொல்கிறார்கள்.
பெரிய தயாரிப்பு நிறுவனம், பெரும் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம், அதே இயக்குநர், அதே நாயகன், நாயகி இப்படிப் பல சாதகமான அம்சங்களுடன் படப்பிடிப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது 96 இரண்டாம் பாகம்.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.