தக் லைஃப் – முதல் பாடல் வெளியானது..!

கமல்ஹாசன் நடிப்பில்,  மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ கலைவாணர் அரங்கத்தில் 17.04.2025 காலைநடைபெற்ற நிகழ்வில்வெளியிடப்பட்டது.
கமல்ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் அஷோக் செல்வன் பங்கேற்ற இந்நிகழ்வு, இந்திய சினிமாவின் துணிச்சலான புதியதோர் அத்தியாயத்தின் தொடக்கமாகத் திகழ்ந்தது.
கல்யாணக் கொண்டாட்டம் என்னும் விறுவிறுப்பான பின்னணியில், கமல்ஹாசனும், சிலம்பரசன் டி.ஆரும், இணைந்து ஆடியிருக்கும் இந்தப் பாடல், ரஹ்மானுக்கே உரித்தான பாணியில் நாட்டுப்புறத் தாளக்கட்டும், தற்கால இசையும் இணைந்து அமைந்திருக்கிறது.கமல்ஹாசனின் வரிகளுடன், ஈர்க்கும் குறும்பும், துள்ளலுமான இந்தப் பாடல், பல அடுக்குகளைக் கொண்ட ‘தக் லைஃப்’ உலகத்துக்கான வண்ண மயமான முதல் வாசலாக அமைந்துள்ளது.

இந்தப் படம் வரும் ஜூன் 5-ம் தேதி உலகளாவிய அளவில் வெளியாகவுள்ளது.

இந்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தில், ‘ரங்கராய சக்திவேல் நாயக்கர்’ என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாஸர், அலி ஃபஸல், சான்யா மல்ஹோத்ரா ஆகியோருடன் இந்திய அளவில் புகழ் பெற்ற மேலும் பல நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால் பெரும் நட்சத்திரப் பங்கேற்பு கொண்ட படமாக இந்த ‘தக் லைஃப்’ திரைப்படம் உருவாகியுள்ளது.