மோகன்லால் பிறந்தநாளில் வெளியான கண்ணப்பா சிறப்பு கிளிம்ப்ஸ்

வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் கண்ணப்பா திரைப்படத்தை ‘மகாபாரதம்’ தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மோகன்லால், கிராதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜூன் 27-ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில்,நடிகர் மோகன்லாலின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படக்குழு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளது.