பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் ’ஹரி ஹர வீரமல்லு’.
ஜூன் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா டாரா” வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளரான ’KVN’ நிறுவனத்தின் உரிமையாளரை சந்தித்தேன். அவர் நான் பாய்ஸ் படத்தில் எழுதிய “பிரீடம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை” என்ற என் பாடல் வரிகளை கேட்டு, அவர் வீட்டை விட்டு வெளியில் வந்து பெரிய ஆளாக வளர்த்துள்ளார். சினிமா பலரின் வாழ்க்கையை மாற்றியமைக்கும்.
இந்த ‘ஹரி ஹர வீர மல்லு’ படம் 17ம் நூற்றாண்டில் நடக்கும் படம். அந்நேரத்தில் இந்தியாவில் என்னென்ன நடந்தது என்பதை புனைக்கதையாக இப்படத்தில் சொல்லியுள்ளோம். இப்படம் தாமதமான காரணம் என்னவென்பதை இப்படம் வெளிவந்த பின் தெரியும். இப்படத்தை கமர்ஷியலாகவும், கருத்துள்ள ஒரு படமாகவும் எடுத்துள்ளோம். இப்படத்தில் சத்யராஜ் சார் விரும்பி ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு சிறிய பாத்திரம் என்றாலும் அது படம் வெளியான பிறகு பெரிதாக பேசப்படும். இப்படத்தில் அவரை காப்பாற்றத்தான் பவன் கல்யாண் சார் பயணம் செய்கிறார்.
இது பாகம்-1 தான், நாங்கள் பாகம் -2 எடுக்கவுள்ளோம். இப்படம் உருவாக முக்கிய காரணம் என் மகன் ஜோதி கிருஷ்ணாதான். என் மகன் சினிமா துறைக்கு வருவதில் என் மனைவிக்கு விருப்பம் இல்லை. அவர், ஒரு மருத்துவராக வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார். ஆனால் என் வேலையை பார்த்துவிட்டு, லயோலா கல்லூரியில் விஸ்காம் படிப்பதற்காக விண்ணப்பித்தார். அவருக்கு அப்போது கிடைக்கவில்லை. அதன் பின் சரத்குமார் சார் உதவியுடன், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சேர்ந்தார். அதன் பின், எனக்கே தெரியாமல் லண்டனில் படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். என் மனைவி ஒப்புதல் தரமாட்டார் என்று நினைத்தபோது அவர் ஜோதி லண்டன் செல்ல ஒப்புதல் தெரிவித்தார்.
அதற்கு முன்புதான், கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் “நட்புக்காக” படத்தின் கதையை கூறியிருந்தார் ஜோதி. அதன் பின், படிப்பை முடித்துவிட்டு நான் இயக்கம் செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டார். ஒரு அப்பாவாக நான் 1 கோடிக்கு சிறிய படம் ஒன்றை இயக்க சொல்லி கேட்டுக் கொண்டேன். அப்போது, எனக்கு 20 உனக்கு 18 படம் இயக்கினார்.
அவர் இதுவரை இயக்கிய அனைத்தும் காதல் கதைகள்தான். இப்போது தான் ஒரு பான்-இந்தியா படத்தை இயக்கியிருக்கிறார். தொழில் நுட்ப ரீதியாக நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனால், ஜோதி இப்படத்தை இயக்கிய விதம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
இப்படத்திற்கு கீரவாணி சார் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அந்தப் பாடலை பவன் கல்யாண் சாரிடம் காட்டிய போது, 15 முறை பார்த்தார். அதன் பின், வீட்டிற்கு சென்று ஒரு 50 முறை பார்த்துவிட்டு கீரவாணி சார் அவர்களை பாராட்டியுள்ளார்.
டெக்னிகலாக பவன் கல்யாண் சார் அவர்களுக்கு நிறைய தெரியும். அதனால், மிகுந்த அக்கறையுடன், அவர் துணை முதலமைச்சராக இருப்பதால் படம் எந்த காரணத்திற்காகவும் குறையாக வந்துவிட கூடாது என்பதற்காக அதிக அக்கறை செலுத்தினார். இப்படத்தை உயர்ந்த தரத்தில் கொடுப்பதற்காக, தூங்காமல் இரவும் பகலுமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் ஜோதி. இப்படத்தில் மூலம் ஜோதிக்கு பெரிய பேர் கிடைக்கும்.” என்றார்.
இயக்குநர் ஜோதி கிருஷ்ணா பேசுகையில்,
‘ஹர ஹர வீர மல்லு’ படத்தை இயக்கும் போது இவ்வளவு பெரிய ஃபேன் இந்தியா படமாக வரும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. எனக்கு முன்பு என்னுடைய அப்பா பேசினார். நான் சுமார் 8 வருட காலம் படத்தை இயக்காமல் இருந்தேன். அதற்கு காரணம் அஜித் சார் என்னிடம் “அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. அவரை கவனித்துக் கொள்ளுங்கள். தயாரிப்பு வேலைகளை பாருங்கள். அது உங்களுக்கு நன்றாக வரும்” என்று சொன்னார்.
எவ்வளவு பெரிய ஸ்டார் நம்மைப் பற்றியும் நமது அப்பாவை பற்றியும் சிந்திக்கிறார் என்று அன்றோடு இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஆனால் நான் தயாரிக்க வேண்டும் என்றால் அடுத்தடுத்து படங்கள் வேண்டும் என்றேன். நான் நடிக்கிறேன் என்று தொடர்ந்து மூன்று படங்கள் கொடுத்தார். ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘வேதாளம்’.
ஆனால், இதன் பிறகு அவர் சூர்யா மூவிஸ்க்கு நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனாலும், அவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதை காப்பாற்றுவார்.
எட்டு வருடங்கள் கழித்து பவன் சாரை சந்தித்தேன், அவர் என்னிடம் “எனக்கு ரத்தினம் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீ என்ன செய்வாய் என்று எனக்கு தெரியாது. எப்படியாவது இந்த படத்தை வெற்றி படமாக ஆக்க வேண்டும்” என்று கூறினார்.
பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் என் மீதும் அப்பா மீதும் வைத்திருக்கும் அன்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காக நாம் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
பவன் கல்யாண் சார் மிகவும் புத்திசாலி, தனிப்பட்ட இயக்குநரும்கூட. அவர் அரசியல் பொது சேவையில் ஈடுபட்டதால் அவருக்கு இயக்குவதற்கான போதுமான நேரம் இல்லை. ஆனால், இந்தப் படத்தை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்று கடினமாக உழைத்து இருக்கிறார். நீங்கள் பார்த்த அசுரனா பாடலை அவரே நடனம் மற்றும் சண்டை காட்சிகளை இயக்கினார். சண்டை காட்சிகள் மட்டுமே 60 நாட்கள் எடுத்திருக்கிறோம்.
பாவன் சாருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும். அதை வைத்து இந்த படத்தில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார். இந்த படம் 16-ம் நூற்றாண்டு முகலாயப் பேரரசு ஔரங்கசீப்பின் காலகட்டத்தில் நடக்கும் கதை. பாபி டியோல் ஔரங்கசீப்பாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் கதையை எழுதும்போது ஔரங்கசீப் என்ன சொல்ல வருகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அஜந்தா எல்லோரா போன்ற சுற்றுலா இடங்களை பார்வையிட்ட ஒரு குழுவினரை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. அவர்கள் திடீரென்று அவுரங்கசீப்பை திட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்ததால் அவர்களிடம் பேசினேன்.
அப்போது அவர்கள் “அஜந்தா, எல்லோரா போன்ற இடங்களில் எவ்வளவு சிற்பக் கலைகளை வடித்து வைத்திருக்கிறார்கள். அதை இப்போது அழித்து வருகிறார்கள். வருங்கால சந்ததியர்களுக்கு இதுபோன்ற சிற்பக் கலை இருந்தது தெரியவே கூடாத வகையில் அழித்து வருகிறார்கள்” என்று கூறினார்கள். அந்த ஒரு சின்ன பொறிதான் இப்படத்தை உருவாக்கியது.
பவன் கல்யாண் சார் நம்முடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிக்கக் கூடாது என்பதற்காக எவ்வாறு போராடுகிறார் என்பது படத்தின் கதை.
இந்தக் கதை எழுதி இரண்டு வருடங்களுக்குப் பிறகு பவன் கல்யாண் சார் துணை முதலமைச்சர் ஆகிறார். அப்போது திருப்பதி சம்பவத்தில் சனாதன தர்மத்தை நிலை நாட்ட குரல் கொடுக்கிறார். இந்த படமும் சனாதன தர்மத்தை நிலை நாட்ட கூடிய ஒரு படம்தான்.
பவன் சார் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம், யாராவது ஒருவர் பிரச்சனையோடு வந்தால் மற்றவர் பிரச்சனையை தன் பிரச்சினையாக பார்த்து அதை தீர்ப்பார். படப்பிடிப்பு இருக்கும் போது அரசியல் சேவைகளையும் பார்த்துக் கொண்டு இடைவிடாமல் நடித்து விட்டு செல்வார்.
அடுத்து, நான் எப்படி உயர்ந்த தரத்தில் ஒரு படத்தை நினைப்பேனோ அதேபோலத்தான் வரணும். ஒவ்வொரு காட்சிகளையும் 5 கேமராவை வைத்து படம் பிடித்தோம். இந்தியாவில் உலகத்தில் உள்ள அனைத்து கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தையும் இதில் பயன்படுத்தி இருக்கிறார், கிட்டத்தட்ட 1000 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் வரும்போது இந்த தொழில்நுட்ப வேலைகளுக்காகத்தான் இவ்வளவு வருடங்கள் ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். அதிலும் கடைசி 15 நிமிடங்கள் யாரும் இதுவரை எதிர்பார்க்காத காட்சிகளாக இருக்கும்.
நிதி அகர்வால் இப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்கும்போது சிறிது பதட்டமாக இருந்தார். ஆனால் ஒரு காட்சியில் இவர் எதிர்பாராதவிதமாக நிஜ கத்தியை வைக்கும்போது பயந்துவிட்டார். அந்தக் காட்சி படத்தில் யதார்த்தமாக, அற்புதமாக வந்திருக்கிறது.
நாசர் சாருக்கு நன்றி. சத்தியராஜ் சாருக்கும் நன்றி. நான் சத்யராஜ் சாருடைய மிகப் பெரிய ரசிகன். அவர் எம்ஜிஆர் மாதிரி நடிக்கும் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நான் எப்போதும் கதாநாயகனாகத்தான் பார்ப்பேன். ஷோபி அருமையாக நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
கீரவாணி சாரிடம் ஒரு பாடலை எழுதி அதற்கு அவர் இசையமைப்பாரா என்று தயங்கினேன். அவர் பார்த்ததுமே மிகவும் அருமையாக இருக்கிறது என்று இசையமைத்தார். மேலும் அந்த பாடலை பவன் சார் பாடினால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்பட்டார். இதைக் கேட்டதும் பவன் சாரும் ஆர்வம் ஆகிவிட்டார். ஆனால், இவர் விஜயவாடாவிலும் அவர் ஹைதராபாதிலும் இருந்தார்கள். உடனே தன்னுடைய குழுக்களை அழைத்து விஜயவாடாவிற்கு சென்று பவன் கல்யாண் சாரை நேரலையில் பாட வைத்து பதிவு செய்தார்.
தோட்டதரணி சார் இந்த வயதிலும் ஆர்வமாக உழைப்பதே பார்க்கும்போது சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிந்தது. ஆனால், இப்போது இருக்கும் தலைமுறையினர் 25% கூட வேலை செய்வதில்லை.
வரும் ஜூன் 12-ம் தேதி படம் வெளியாகிறது. அதற்கு பிறகு இந்தியாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படம் வெளியானதும் விரைவில் இதனுடைய 2-ம் பாகமும் வெளியாகும்.” என்றார்.