நீதிமன்ற காட்சிகள் நிறைந்த, திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில் சுரேஷ்கோபி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜானகி என்பது இராமாயண கதாபாத்திரமான சீதாவின் மற்றொரு பெயர் எனவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணின் பெயர் ஜானகி என இருப்பது சரியல்ல எனவும் சென்சார் போர்டு கருத்து தெரிவித்திருந்தது.
மேலும், சினிமா டைட்டிலிலும், கதாநாயகியின் கதாபாத்திரத்திரமாக ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும் என தணிக்கை குழு கூறியிருந்தது. அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருந்தது.
இதற்கிடையே படத்தைவெளியிட அனுமதிக்க வேண்டும் என படக்குழுவினர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையின்போது ரிவியூ கமிட்டி சினிமாவை பார்க்க உள்ளதாக தணிக்கை குழு தெரிவித்திருந்தது.
ரிவியூ கமிட்டி சினிமாவை முழுமையாக பார்த்த பிறகும் ஜானகி என்ற பெயரை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்தது. பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் படத்தை பார்த்தனர். ஐகோர்ட்டில் 9.07.2025 அன்றுகாலை நடைபெற்ற விசாரணையின்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜானகி என்ற பெயரை மாற்றுவதில் சிரமம் உள்ளதாகவும். டீசர் உள்ளிட்ட அனைத்திலும் ஜானகி என வெளியிடப்பட்டுவிட்டதாகவும். இனி பெயரை மாற்றினால் பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படும் எனவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பத்மாவத், பில்லு பி உள்ளிட்ட சினிமாக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக தணிக்கை குழுவினர் நீதிமன்றத்தில்தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்பெயரிடுவதற்கு கலைத்துறையினருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது அல்லவா. எனவே, ஜானகி என்ற பெயர் வரும்போது, இது சரித்திர கதாபாத்திரத்துக்கும் இந்த கதாபாத்திரத்துக்கும் சம்பந்தம் இல்லை என எழுத்துவடிவில் காண்பித்தால் போதாதா.
இதுபற்றி இயக்குநர் பிரவீன் நாராயணன் கூறுகையில்,