விக்ரம் இணையும் வெற்றிப்பட இயக்குநர் 96 பட பிரேம்குமார்

தமிழ் சினிமாவில் வியாபாரம் உள்ள நடிகர்கள் நடிக்கும் படங்களை அதிகமாக தயாரிக்கும் நிறுவனமாக முன்னேறி வரும்வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 நடிகர் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் படங்களை இயக்கிய  பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.
உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட்டின் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.