பலரால் எள்ளி நகையாடப்படும் வழக்கறிஞராகநடித்திருக்கும் சரவணன், சாதரணமாக அறிமுகம் ஆகி விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்
அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் ஆகியோரும் தொடரில் நடித்திருக்கிறார்கள்.
நீதிமன்றத்துக்குள் பெரும்பகுதி திரைக்கதை நகர்வதால் ஒளிப்பதிவாளருக்குப் பெரிய வேலை இருக்காது என்று நினைத்தால் அதிலும் பல்வேறு கோணங்களை வைத்து தன் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுலகிருஷ்ணன்.
விபின்பாஸ்கர் தனதுபின்னணி இசையால் சரவணன் கதாபாத்திரத்தைப் பன்மடங்கு வலிமை படுத்துகிறார்.
தொடர் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகரவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உழைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ராவணன்.
தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ்,சரவணனின் பாத்திரப் படைப்பில் சுவாரசியம் கூட்டியிருக்கிறார்.சரவணன் மட்டுமே இருந்தால் போதாதென்று நம்ரிதாவை அழகாகக் காட்டியிருக்கிறார்.பழகிய கதைக்களம் தானே என்று யாரும் அசட்டையாக உட்கார்ந்துவிடாதபடி காட்சிகளை அமைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.