பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கை பயணத்தை சொல்லும் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டீஸர் எப்படி?
“சாந்தீ… பணம் சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?” எனும் சமுத்திரக்கனியின் குரலோடு தொடங்கும் டீசர் பின்னர் பலரது குரல்களோடு சம்பாதிப்பதற்கான பல்வேறு வழிகளை வெளிப்படுத்தி பணம் எப்படி வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சுவைபட எடுத்துரைக்கிறது.
சீரியஸான விஷயங்களை கூட சிம்பிளாகவும் சிரிப்பு வர வைக்கும் வகையிலும் வெளிப்படுத்தும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர், பணத் தேவை மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதை இன்றைய கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் சொல்கிறது.மனைவியோடும் மகனோடும் ஒரு குடும்பத் தலைவராக காட்டப்படும் சமுத்திரக்கனி, பின்னர் வெளிநாடுகளில் தனியாக இருப்பது போல் டீசர் காட்டுகிறது கௌதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்புகளை டீசர் ஏற்படுத்துகிறது.
“பணக்காரன் ஆகணும்னா பணக்காரனா வாழ கத்துக்கணும், காசு இல்லையா கடன் வாங்கி செலவு பண்ணு” என்று சமுத்திரக்கனி சொல்வதோடு நிறைவடையும் டீசர் பார்வையாளர்களை ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது.
சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசையை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர். மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைத்துள்ளார்.