அப்படி மக்களைதாங்கி நிற்கும் அச்சாணியாக இருக்கும் உழவர்கள் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இல்லை.கொண்டாடப்பட வேண்டிய அவர்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்குஎடுத்துக்காட்டாக எண்ணற்ற படங்கள் வந்திருக்கின்றது அந்த வரிசையில் வந்திருக்கும் படம் மருதம்.
ராணிப்பேட்டை அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மனைவி, ஒரு குழந்தை என அளவான குடும்பத்துடன் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் விதார்த்.
நாயகனாக நடித்திருக்கும் விதார்த், ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு மிகச் சரியாகப்பொருந்தியிருக்கிறார்.
ஒரு குழந்தைக்கு அம்மா என்றால் இன்றைய நடிகைகள்நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.துணிந்
அருள்தாஸின் வேடம் நல்லமனிதர்களின் பிரதிபலிப்பு. வழக்கமாகச் சிரிக்க வைக்கும் மாறன், இதில் சிரிக்க வைத்துவிட்டு கடைசியில் கண்கலங்கவும் வைத்துவிட்டார்.இயக்குநர்கள் சரவண சுப்பையா, தினந்தோறும் நாகராஜ் ஆகியோரும் சிறப்பு.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மண்மணம் கமழ்கிறது.
அருள் கே.சோமசுந்தரம் ஒளிப்பதிவில் ஒரு வடமாவட்ட கிராமத்துக்குப் போய்வந்தது போல் எண்ணம் வருகிறது.
இயக்குநர் வி.கஜேந்திரன், உள்ளும் புறமும் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும் இடர்ப்பாடுகளைச் சுட்டியிருப்பதோடு அவர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் இரு கூட்டத்தைப் பற்றிச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.
மருதம் வடமாவட்ட வாழ்வியல்